மறுமலர்ச்சி நகரம் வவுனியா மாநகர சபை
உள்ளூராட்சி வார நிகழ்வுகள் – 2025
2025.09.18 மூன்றாம் நாள் நிகழ்வுகள் – வருமான மேம்பாட்டு தினம்
******************************************************************

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு சபையின் வருமான மட்டத்தினை அதிகரித்து, இதன் மூலம் பிரதேசமட்ட அபிவிருத்தியை ஏற்படுத்தும் பொருட்டு வவுனியா மாநகரசபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர் குழாமினால் இச்செயற்றிட்டமானது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களும் தமது சொந்த வருமான மூலங்கள் எவை என சரிவர இனங்கண்டு அவற்றை கூட்டு முயற்சியாக சேகரித்து தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேச விருத்தியை அதிகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் உள்ளூராட்சிவாரத்தின் இன்றைய நாள் அமைந்திருந்தது.
சபையினால் வருமான சேகரிப்பிற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, வவுனியா மாநகர சபையின் அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து சபையின் சகல வட்டாரங்களிலும், ஆதன வரி வருமானங்களை சேகரித்தல், வியாபார வரி மற்றும் வியாபார உரிமங்களை வழங்குதல், உயர்தொழில் உரிமங்களை வழங்குதல், வியாபார நிலையங்களுக்கான கழிவகற்றல் கட்டணங்களை அறவீடு செய்தல் போன்ற வருமான மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு மாநகர சபைக்குரிய வருமானமாக ஒரேநாளில் ரூபா 6 மில்லியன் அறவீடு செய்யப்பட்டிருந்தமை மிகவும் சிறப்பானதோர் விடயமாகும்.
சபையின் இவ்வாறான ஓர் சிறப்பான செயற்பாட்டினை முன்னெடுத்திருந்த வவுனியா மாநகர சபையின் உத்தியோகத்தர் மற்றும் ஊழியர் குழாமிற்கும், மற்றும் இச்செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கியிருந்த பொதுமக்கள், வர்த்தகர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.
”வளமான நாடும் அழகான வாழ்க்கையும்”
முதல்வர்
வவுனியா மாநகர சபை
