வவுனியா நகர சபையின் 2025 ஆம் ஆண்டிற்கான வரைவு வரவு செலவுத்திட்டம் பொது மக்களின் பார்வைக்கு:

வவுனியா நகர சபையின் 2025 ஆம் ஆண்டிற்கான வரைவு வரவு செலவுத்திட்டம் பொது மக்களின் பார்வைக்கு
வவுனியா நகர சபையின் 2025 ஆம் ஆண்டிற்கான வரைவு வரவு செலவுத்திட்டமானது 02.12.2024 ஆம் திகதியிலிருந்து 11.12.2024 ஆம் திகதி வரை நகர சபை அலுவலகம், பொது நூலகம் மற்றும் சன சமூக நிலையங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வரவு செலவு திட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்காக முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், சபைக்குரிய வருமானங்கள் மற்றும் செலவீனங்கள் தொடர்பான அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமையினால், பொது மக்களாகிய நீங்கள் இவ் வரவு செலவு திட்டத்தினை அலுவலக நாட்களில் பார்வையிட்டு தங்களது அபிப்பிராயங்களை
செயலாளர்
நகர சபை
வவுனியா
எனும் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ 12.12.2024 ஆம் திகதிக்கு முன்னர் தெரிவிக்க இயலும் என்பதனை அறியத்தருகின்றோம்.
வரவு செலவு திட்டத்தினை PDF வடிவில் கீழ்வரும் இணைப்பினை தொடர்வதன் மூலம் மும்மொழிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

வழங்குனர்களையும் ஒப்பந்தகாரர்களையும் பதிவுசெய்தல்-2024

வழங்குனர்களையும் ஒப்பந்தகாரர்களையும் பதிவுசெய்தல்-2024

நகர சபையானது 2024 ஆம் ஆண்டுக்கான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு தம்மை பதிவுசெய்துகொள்ள விரும்பும் வழங்குனர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்கவுள்ளது.
குறிப்பு 👇
👉விண்ணப்பப்படிவங்களை நகர சபை வவுனியா எனும் முகவரியில் இயங்குகின்ற எமது அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
👉ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் பதிவுக்கட்டணமாக ரூபா.1000 செலுத்தப்பட வேண்டும்.
👉விண்ணப்பப்படிவங்கள் 20.12.2023 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
👉பதிவுகள் 2024 ஆம் ஆண்டுக்கு மட்டும் செல்லுபடியாகும்.
மேலதிக விபரங்களுக்கு
☎️024-2222275
☎️024-2225050
ஆகிய எமது அலுவலக தொலைபேசி இலக்கங்களுக்கு அழையுங்கள்.
Follow Our Official Facebook Page
நகர சபை வவுனியா
Urban Council Vavuniya
Like, share, and follow ⍟ ⭒
Translate »