Month: October 2023
முக்கிய அறிவித்தல்…
வவுனியா நகர சபை தீயணைப்பு வாகனத்தின் திருத்த நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றமையினால் குறிப்பிட்ட சில நாட்களுக்கு சபையினால் தீயணைப்பு சேவைகளில் ஈடுபட முடியாதுள்ளது என்பதனை மன வருத்தத்துடன் அறியத்தருவதுடன், தீயணைப்பு வாகன திருத்த பணிகள் நிறைவடைந்தததும் இது தொடர்பில் அறியத்தரப்படும் என்பதனையும் பொது மக்களாகிய உங்கள் கவனத்திற்கு அறியத்தருகின்றோம்.நூலக தேசிய வாசிப்பு மாதம் – ஒக்டோபர் – 2023 சஞ்சிகைக்கான ஆக்கம் கோரல்

எதிர்வரும் மழை காலத்திற்கு முன்பதாக வடிகாலமைப்பு சுத்திகரிப்பு பணிகள்

தற்போது மழைகாலத்தினை முன்னிட்டு வெள்ளநீர் வடிகாலமைப்பு சுத்திகரிப்பு பணிகள் சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது..
பொதுமக்களாகிய நீங்களும் இப்பணியில் பங்கெடுத்து தங்களது வீதியின் காண்களை பராமரித்து எதிர்வரும் மழைகாலத்தின் போதான வெள்ள நீர் அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்கு தங்களது ஒத்துழைப்பினை வழங்கியுதவுமாறு அன்புடன் கேட்டு நிற்கின்றோம்.
——————————********——————————
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு சனசமூக நிலையங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டி-2023

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நகரசபையின் கீழ் இயங்கும் சனசமூக நிலையங்களுக்கிடையே கீழ்க்குறிப்பிடப்படும் விளையாட்டுக்களை நடாத்துவதற்கு நகரசபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளமையால், நகரசபையின் கீழ் இயங்கும் சனசமூக நிலையங்கள் தாங்கள் பங்கு பெற விரும்பும் விளையாட்டுக்கள் தொடர்பான விருப்பத் தெரிவினை கீழ்க்குறிப்பிடப்படும் கூகிள் படிவத்தினை (Google Form) எதிர்வரும் 25.10.2023 ஆம் திகதிக்கு முன்னதாக பூரணப்படுத்தி Submit செய்வதன் மூலம் எமக்கு தெரியப்படுத்த முடியும்.
https://docs.google.com/…/1FAIpQLSdO_MJWA4rSgD…/viewform
அல்லாது விடின் http://demo2.cendri.org என்ற இணையத்தள பக்கத்தில் Online Service ஊடாக பதிவுசெய்யமுடியும்.
மேலதிக விபரங்களுக்கு
024-2222275
செயலாளர்,
நகரசபை,
வவுனியா
பொது அறிவித்தல் – நகர சபை, வவுனியா

முக்கிய அறிவித்தல் – கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துதல்

