சுற்றுலாத்துறை சார்ந்த சாரதிகளுக்கான இலவச கருத்தரங்கு

சுற்றுலாத்துறை சார்ந்த சாரதிகளுக்கான இலவச கருத்தரங்கு

சுற்றுலாத்துறை பணியகத்தின் அனுசரணையுடன் சுற்றுலாத்துறையினை சேர்ந்த சாரதிகளுக்கு பயிற்சியளிப்பதற்கான திட்டத்தின் கீழ் வவுனியா மாநகர ஆளுகைக்குட்பட்ட சாரதிகளுக்கு (Car, Van, Three Wheeler) பொருத்தமான வளவாளர்களை கொண்டு 22.11.2025 மற்றும் 23.11.2025 ஆகிய இரு தினங்களும் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை வவுனியா மாநகர சபையில் அமைந்துள்ள நகர மண்டபத்தில் இலவச கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
எனவே குறித்த பயிற்சிநெறியில் பங்கேற்க ஆர்வமுள்ள சுற்றுலாத்துறை சார்ந்த முச்சக்கர வண்டி(Auto), மகிழுந்து(Car Taxi), வான் (Van) சாரதிகள் வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வவுனியா மாநகர சபைக்குட்பட்ட சுற்றுலாத்துறையில் இணைவதற்கு ஆர்வமுள்ள சாரதிகள் இக்கருத்தரங்கில் பங்குபற்றுவதற்குரிய பெயர் விபரங்களை அலுவலக தொலைபேசி இலக்கம் ஊடாகவோ அல்லது கீழ்வரும் கூகுள் படிவத்தினை சமர்ப்பிப்பதன் ஊடாகவோ முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மாநகர ஆணையாளர்
வவுனியா மாநகர சபை
தொடர்புகளுக்கு : 024-2222275

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »