மறுமலர்ச்சி நகரம் வவுனியா மாநகர சபை
உள்ளூராட்சி வார நிகழ்வுகள் – 20.09.2025
ஆறாம் நாள் நிகழ்வுகள் – பொதுமக்கள் பயன்பாட்டு மற்றும் உலக தூய்மைப்படுத்தல் தினம்
*******************************************************************

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு 20.09.2025 ஆம் திகதி சனிக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டு மற்றும் உலக தூய்மைப்படுத்தல் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமைக்கமைவாக, ஆறாம் நாள் நிகழ்வாக நேற்றைய தினம் 20.09.2025 ஆம் திகதி வவுனியா மாவட்ட சாரணர் சங்கம், மாநகரசபை மற்றும் Rotract Club இணைந்து வவுனியா மாநகர வீதிகளை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன்போது நகரத்தின் பிரதான வீதிக்கரைகளில் இருந்த பெருமளவான பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் அகற்றப்பட்டிருந்தது.
இச்சிரமதான நிகழ்வின் போது வவுனியா பண்டார வன்னியன் சதுக்கத்தில் இருந்து மாநகர சபை எல்லை வரையான மன்னார் வீதி , குருமங்காடு காளி கோவில் வீதியிலிருந்து தாண்டிக்குளம் புகையிரத நிலையம் வரையான வீதி, ஹொறவப்பொத்தனை வீதியில் இருந்து வெளிக்குளம் வரையான வீதி ஆகிய பிரதான வீதிகளில் தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் வவுனியா மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனைத்தொடர்ந்து, பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையின் தீமைகள் தொடர்பாக சாரண மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் சுற்றுசூழல் அதிகாரசபையின் யாழ் மாவட்ட உதவிபணிப்பாளர் தவகிருபா கலந்துகொண்டு மாணவர்களுக்கு கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
குறித்த நிகழ்வுகளில் வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன், மாநகர ஆணையாளர் வாகீசன், உதவி மாவட்ட ஆணையாளர்களான சந்திரமோகன்,யதீஸ்கரன்,பிரதீபன், மற்றும் மாநகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
“‘வளமான நாடும் அழகான வாழ்ககையும்”
