மறுமலர்ச்சி நகரம் வவுனியா மாநகர சபை உள்ளூராட்சி வார நிகழ்வுகள் – 2025

மறுமலர்ச்சி நகரம் வவுனியா மாநகர சபை
உள்ளூராட்சி வார நிகழ்வுகள் – 2025
******************************************************************
உள்ளூராட்சி வாரத்தின் கீழ் 21.09.2025 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள விளையாட்டு தினத்தை முன்னிட்டு, மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட வட்டாரங்களுக்கிடையிலான துடுப்பாட்ட போட்டிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், மற்றும் சபையின் உறுப்பினர்களுக்கான துடுப்பாட்டம், சதுரங்கம் மற்றும் பூப்பந்தாட்ட முதற்கட்ட போட்டிகள் இடம்பெற்று வருகின்றது. இதன் இறுதிக்கட்ட நிகழ்வுகள் 21.09.2025 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
அந்த வகையில், வவுனியா மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கிடையிலான சதுரங்க போட்டிகள் 17.09.2025 ஆம் திகதி நகர மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இப்போட்டிகளுக்கு வவுனியா IDM நிறுவனம் தன்னுடைய அனுசரணையை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் IDM பிரதம பணிப்பாளர் திரு. அன்ட்றூ (வவுனியா, IDM நிறுவனம்) அவர்களுக்கு மாநகர சபை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
முதல்வர்
வவுனியா மாநகர சபை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »