வவுனியா மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வரைவு மக்களின் பார்வைக்காக

வவுனியா மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வரைவு பொது மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக 21.11.2025 ஆம் திகதியில் இருந்து 30.11.2025 ஆம் திகதி வரை மாநகர சபை அலுவலகம், பொது நூலகம் மற்றும் சனசமூக நிலையங்களில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை அலுவலக நேரத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை பார்வையிட முடியும்.
பாதீட்டில் 2026 ஆம் ஆண்டிற்கான வருமானங்கள் மற்றும் செலவீனங்கள் தொடர்பான விடயங்களும், மேற்கொள்ளவிருக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இதனை பார்வையிட்டு அபிப்பிராயங்கள் ஏதுமிருப்பின் ” ஆணையாளர், மாநகர சபை, வவுனியா” எனும் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ 01.12.2025 ஆம் திகதிக்கு முன்னர் தெரிவிக்க முடியும் என்பதனை அறியத்தருகின்றேன்.
ஆணையாளர்
வவுனியா மாநகர சபை
