
பொது அறிவித்தல் – நகர சபை, வவுனியா



நகரசபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் இயங்கும் சனசமூக நிலையங்களுக்கான 2023 இற்கான தரப்படுத்தல் நிகழ்வு நகரசபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.25.09.2023 ,26.09.2023, 27.09.2023 ஆகிய தினங்களில் சனசமூக உத்தியோகத்தர் தலைமையிலான உத்தியோகத்தர்களை கொண்ட குழுவினால் புள்ளியிடப்படல் செயற்பாடு நடைபெற்றன.

நகரசபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் இயங்கும் சனசமூக நிலையங்களுக்கான 2023 இற்கான தரப்படுத்தல் நிகழ்வு நகரசபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.






🌏உலக தூய்மைப்படுத்தல் தினத்தினை முன்னிட்டு 15.09.2023 ஆம் திகதி எமது சபையினால் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற உக்காத கழிவுகளை சேகரித்து சுற்றாடலை தூய்மையாக்கும் செயற்றிட்டம் எமது சபையினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
👉இத்தூய்மையாக்கும் பணியில் எமது சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள் இணைந்து தமது பூரண ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர். 🌷🌷
🌷அந்த வகையில் 15.09.2023 திகதி வெள்ளிக்கிழமை வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியிலிருந்து தாண்டிக்குளம் யு9 வீதி வரையுள்ள வீதியின் இருபுறமும் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற உக்காத கழிவுகள் எமது சபை கழிவகற்றல் வாகனங்களில் தரம்பிரித்து சேகரிக்கப்பட்டன.
🌷இப்பணியில் சமூகப்பொறுப்புணர்வுடன் பங்கெடுத்த அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் சபை சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
🎄பொலித்தீன் பிளாஸ்ரிக் பாவனையைக் குறைத்து பொறுப்புடன் சூழல் நலம் காப்போம்🌏

நகரசபையினால் தயாரிக்கப்படும் சேதனப் பசளை (Compost) மக்கள் நலனை கருத்திற்கொண்டு தற்போது விலை குறைக்கப்பட்டு 1 கிலோ ரூபா 25 இற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என்பதுடன், இதனை எமக்கு சொந்தமான வேப்பங்குளத்தில் அமைந்துள்ள எமது திண்மக்கழிவகற்றல் நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.பொதுமக்களும், விவசாயிகளும் மொத்தமாகவும் சில்லறையாகவும் தங்களுக்குத் தேவையான சேதனப் பசளையினை இங்கு பெற்றுக் கொள்ள முடியும்.

மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 102 ஆவது நினைவு தினம் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.A30 வீதி குருமன்காடு சந்தியில் உள்ள பாரதியார் சிலைக்கு இன்று (11.09.2023) காலை மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுபேருரையும் இடம்பெற்றது. இந் நிகழ்வு வவுனியா நகரசபையின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றதுடன் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
